கண்ணே … (கண்ணே) கனியே… (கனியே)


MOVIE : RAGASIYA POLICE 115
MUSIC : MSV
SINGER : TMS
LYRICS : KANNADASAN

kaNNE … (kaNNE) kaniyE… (kaniyE)
muththE….(muththE) maNiyE …(maNiyE )
arugE vaa…

karumbinil thEn vaiththa kannam minnavaa
kani tharum vaazhaiyin kaalgaL pinnavaa
kaNNE kaniyE muththE maNiyE
arugE vaa…

semmaathuLaiyO paniyO mazhaiyO
un siriththa mugam enna
siRu thennampaaLaiyil minnal kiiRRu
vadiththa sugam enna
oru kOdi mullai puu
viLaiyaadum kalai enna
vaa enbEn vara vENdum
thaa enbEn thara vENdum
kaNNE kaniyE muththE maNiyE
arugE vaa…

oru naaL iravu nilavai eduththu
un udal amaiththaanO
pala naaL muyanRu vaanavilkoNdu nal
vaNNam thanththaanO
ennai kaaNa sonnaanO
thuNai sEra sonnaanO
aananththam varavaaga
aasai manam selavaaga
kaNNE kaniyE muththE maNiyE
arugE vaa…

Tell-a-Friend

கண்ணே … (கண்ணே) கனியே… (கனியே)
முத்தே….(முத்தே) மணியே …(மணியே )
அருகே வா…

கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
கனி தரும் வாழையின் கால்கள் பின்னவா
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா…

செம்மாதுளையோ பனியோ மழையோ
உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம்பாளையில் மின்னல் கீற்று
வடித்த சுகம் என்ன
ஒரு கோடி முல்லை பூ
விளையாடும் கலை என்ன
வா என்பேன் வர வேண்டும்
தா என்பேன் தர வேண்டும்
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா…

ஒரு நாள் இரவு நிலவை எடுத்து
உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில்கொண்டு நல்
வண்ணம் தந்தானோ
என்னை காண சொன்னானோ
துணை சேர சொன்னானோ
ஆனந்தம் வரவாக
ஆசை மனம் செலவாக
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா…