கண்ணுக்கு குலமேது


MOVIE : KALANGARAI VILAKKAM
MUSIC : VISWANADHAN – RAMAMURTHY
SINGER : P.SUSHEELA.

kaNNukku kulamEdhu (2)
kaNNaa karumaikku inam Edhu
kaNNukku kulamEdhu
kaNNa karumaikku inam Edhu
kaNNukku kulamEdhu

viNNukkuL pirivEdhu.. kaNNaa
viNNukkuL pirivEdhu .. kaNNaa
izhappukku iruLEdhu..

kaNNukku kulamEdhu
kaNNa karumaikku inam Edhu
kaNNukku kulamEdhu

paalil irunthu…. aa..aa
paalil irunthu ney piRakkum.. kaNNaa
paramboruL kaNdE uyir piRakkum
viiraththil irunthu kulam piRakkum
adhil mElenRum kiizhenRum enggirukkum

kaNNukku kulamEdhu
kaNNa karumaikku inam Edhu
kaNNukku kulamEdhu

koduppavar illaam.. koduppavar ellaam mElaavaar
kaiyil koLbavar ellaam kiizhaavaar
tharubavan allavO kaNNaa nii
tharumaththin thaayE kalanggaathE..

kaNNukku kulamEdhu
kaNNa karumaikku inam Edhu
kaNNukku kulamEdhu

******************************************************

கண்ணுக்கு குலமேது (2)
கண்ணா கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது

விண்ணுக்குள் பிரிவேது.. கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது .. கண்ணா
இழப்புக்கு இருளேது..

கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது

பாலில் இருந்து…. ஆ..ஆ
பாலில் இருந்து நெய் பிறக்கும்.. கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்து குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்

கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது

கொடுப்பவர் இல்லாம்.. கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் அல்லவோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே..

கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது

என்ன உறவோ என்ன பிரிவோ


MOVIE : KALANGARAI VILAKKAM
MUSIC : MSV
SINGER : TMS

enna uRavO enna pirivO
kaadhal naadaga mEdaiyil
enna maayam enna jaalam
kanni puuvizhi jaadaiyil

yaarai solli enna laabam kaanal niirai thEdinEn
dhaagam thiira mOgam thiira paalaivanaththil OdinEn
paalaivanaththil OdinEn

enna uRavO enna pirivO
kaadhal naadaga mEdaiyil
enna maayam enna jaalam
kanni puuvizhi jaadaiyil

-nERRu siriththa sirippu enggE nilavu mugaththai kEtkiREn
-niiyum naanum paadiya paattai paadi paadi
paadi paadi paarkkiREn

enna uRavO enna pirivO
kaadhal naadaga mEdaiyil
enna maayam enna jaalam
kanni puuvizhi jaadaiyil

kaNNai nambi peNNai nambi vaazhntha vaazhkkai pOdhumE
paadhai maaRa payaNam pOga kEttukkoNdEn paadamE
kEttukkoNdEn paadamE

enna uRavO enna pirivO
kaadhal naadaga mEdaiyil
enna maayam enna jaalam
kanni puuvizhi jaadaiyil

********************************************************

என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

யாரை சொல்லி என்ன லாபம் கானல் நீரை தேடினேன்
தாகம் தீர மோகம் தீர பாலைவனத்தில் ஓடினேன்
பாலைவனத்தில் ஓடினேன்

என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

நேற்று சிரித்த சிரிப்பு எங்கே நிலவு முகத்தை கேட்கிறேன்
நீயும் நானும் பாடிய பாட்டை பாடி பாடி
பாடி பாடி பார்க்கிறேன்

என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

கண்ணை நம்பி பெண்ணை நம்பி வாழ்ந்த வாழ்க்கை போதுமே
பாதை மாற பயணம் போக கேட்டுக்கொண்டேன் பாடமே
கேட்டுக்கொண்டேன் பாடமே

என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்

என்னை மறந்ததேன் தென்றலே


MOVIE : KALANGARAI VILAKKAM
MUSIC : MSV
SINGER : P.SUSHEELA.

ennai maRanthathEn thenRalE senRu nii en-nilai solli vaa
kaaRROdu vaLarum sontham kaaRROdu pOgum mannavaa
kaNNOdu malarum anbu kaviyaaga maaraadhO
ennai maRanthathEn thenRalE senRu nii en-nilai solli vaa

kalaiyaadha kaadhal nilaiyaanathenRu azhiyaadha silaigaL seythaayO
onRum aRiyaadha peNNil maNavaasal thottu thiRavaamal enggE senRaayO
-ninaivaana thORRam nizhalaana nenjchil niiyaazhum naaLum varumO
intha nilamaaLum mannan niiyaanabOdhum naanaaLum sontham illaiyO
oo.. kaNdaalum pOdhum kaNgaL en aaval thiirum mannavaa
sonnaalum pOdhum nenjcham malaraadhO maaRaadhO

ennai maRanthathEn thenRalE senRu nii en-nilai solli vaa

thodaraamal thodarum suvaiyaana uRavil
vaLaraamal vaLarnthu ninRaalum
inRu mudiyaamal mudiyum pani pOnRa kanavil
ennai vaazhavaiththu senRaayE
vanthOdum alaigaL enRum en kaadhal paadum illaiyO
ennaaLum enadhu nenjcham unaiththEdi vaaraadhO

ennai maRanthathEn thenRalE senRu nii en-nilai solli vaa

************************************************************

என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாராதோ
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா

கலையாத காதல் நிலையானதென்று அழியாத சிலைகள் செய்தாயோ
ஒன்றும் அறியாத பெண்ணில் மணவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீயாழும் நாளும் வருமோ
இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ
ஓ.. கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம் மலராதோ மாறாதோ

என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா

தொடராமல் தொடரும் சுவையான உறவில்
வளராமல் வளர்ந்து நின்றாலும்
இன்று முடியாமல் முடியும் பனி போன்ற கனவில்
என்னை வாழவைத்து சென்றாயே
*வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும் இல்லையோ
என்னாளும் எனது நெஞ்சம் உனைத்தேடி வாராதோ

என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா