ஆணும் பெண்ணும் ஆதியிலே

MOVIE : UYIR
MUSIC : JOSHUA SRIDHAR
SINGERS : JOSHUA SRIDHAR , MAHADHI & SHALINI

aaNum peNNum aadhiyilE vevvERillai buumiyilE
valimai ellaam aaNaay maaRa..-hEy
menmai ellaam peNNaay maaRa
aarambaththil manidhargaLE aadai illaa vilanggugaLE
kaadhal paarvai vEttaiyaada saaththaan vanththu thOttam pOda
maNNil kaamam vantha pinbE inggE kaNNil kaamam vanthathE
kaattil sErnthu vaazhntha kaalam inggE
miiNdum nEril vanthathE

vanthOm udalOdu udai onRum kidaiyaadhu
thirai vaiththOm oru suvaREdhum kaattukkuL aaLEdhu
viNNaal oru kuudu sugam thanthaal thavaREdhu
inbam oru kaattaaR nEraay vazhiyEdhu
idhu oththippOda mudiyaatha aasai
odhunggi pOga iyalaadha paadhai
kattippOda mudiyaatha kuthirai
kattippOdu vidiyum antha iravai
puuttuppOtta eNNaththaiveLiyil
kuuttippOgum mOganggaL enggaL
kuuchcham koNda uLLaththai aLLi
thuukkippOdu kaamaththil enRu….

vetkam aRiyaathu sathai venROr kidaiyaathu
idhai konRaal mOtcham thaan namdhEgam adaiyaadhu
uLLE udalOdu idhu vanthaal uRanggaadhu
thannaalintha vEtkai thaagam adanggaadhu
idhu neRRikkaNNai thiRakkaadha kuRRam
paRRikkoNdum erikkaatha veppam
muRRuppuLLi illaadha inbam
kaRRukkoLLa ninaiththaalE sorkam
? santharpam kaNdu kaamam udalai kEtkum enRu
uuttumbOdhu uNarththum enRu
viragam viradham mudikkinRa nEram….

aaNum peNNum aadhiyilE vevvERillai buumiyilE
valimai ellaam aaNaay maaRa..-hEy
menmai ellaam peNNaay maaRa
aarambaththil manidhargaLE aadai illaa vilanggugaLE
kaadhal paarvai vEttaiyaada saaththaan vanththu thOttam pOda
maNNil kaamam vantha pinbE inggE kaNNil kaamam vanthathE
kaattil sErnthu vaazhntha kaalam inggE
miiNdum nEril vanthathE
maNNil kaamam vantha pinbE inggE kaNNil kaamam vanthathE

************************************************************

ஆணும் பெண்ணும் ஆதியிலே வெவ்வேறில்லை பூமியிலே
வலிமை எல்லாம் ஆணாய் மாற..ஹேய்
மென்மை எல்லாம் பெண்ணாய் மாற
ஆரம்பத்தில் மனிதர்களே ஆடை இல்லா விலங்குகளே
காதல் பார்வை வேட்டையாட சாத்தான் வந்து தோட்டம் போட
மண்ணில் காமம் வந்த பின்பே இங்கே கண்ணில் காமம் வந்ததே
காட்டில் சேர்ந்து வாழ்ந்த காலம் இங்கே
மீண்டும் நேரில் வந்ததே

வந்தோம் உடலோடு உடை ஒன்றும் கிடையாது
திரை வைத்தோம் ஒரு சுவறேதும் காட்டுக்குள் ஆளேது
விண்ணால் ஒரு கூடு சுகம் தந்தால் தவறேது
இன்பம் ஒரு காட்டாற் நேராய் வழியேது
இது ஒத்திப்போட முடியாத ஆசை
ஒதுங்கி போக இயலாத பாதை
கட்டிப்போட முடியாத குதிரை
கட்டிப்போடு விடியும் அந்த இரவை
பூட்டுப்போட்ட எண்ணத்தைவெளியில்
கூட்டிப்போகும் மோகங்கள் எங்கள்
கூச்சம் கொண்ட உள்ளத்தை அள்ளி
தூக்கிப்போடு காமத்தில் என்று….

வெட்கம் அறியாது சதை வென்றோர் கிடையாது
இதை கொன்றால் மோட்சம் தான் நம்தேகம் அடையாது
உள்ளே உடலோடு இது வந்தால் உறங்காது
தன்னாலிந்த வேட்கை தாகம் அடங்காது
இது நெற்றிக்கண்ணை திறக்காத குற்றம்
பற்றிக்கொண்டும் எரிக்காத வெப்பம்
முற்றுப்புள்ளி இல்லாத இன்பம்
கற்றுக்கொள்ள நினைத்தாலே சொர்கம்
? சந்தர்பம் கண்டு காமம் உடலை கேட்கும் என்று
ஊட்டும்போது உணர்த்தும் என்று
விரகம் விரதம் முடிக்கின்ற நேரம்….