ஊமை பெண் ஒரு கனவு கண்டாள்


MOVIE : VANAMBADI
MUSIC : KVM
SINGER : P SUSHEELA
LYRICS : KANNADASAN

uumai peN oru kanavu kaNdaaL – adhai
uLLaththil vaiththE vaaduginRaaL
veLiyE sollavum mozhiyillai
vEdhanai thiiravum vazhiyillai
veLiyE sollavum mozhiyillai
vEdhanai thiiravum vazhiyillai
uumai peN oru kanavu kaNdaaL – adhai
uLLaththil vaiththE vaaduginRaaL

paRavaigaL ninaippathai yaaraRivaar antha
paramporuL idhayaththai yaaraRivaar
kuzhanthaigaL eNNaththai yaaraRivaar antha
kulamagaL aasaiyai yaaraRivaar
uumai peN oru kanavu kaNdaaL – adhai
uLLaththil vaiththE vaaduginRaaL

uyiraRRa kodiyil malarnthirunthaal avaL
oru naaLaavathu magizhnthiruppaaL
ulagam kaaRRaayp piRanthirunthaalum
ovvoru naaLum vaazhnthiruppaaL
uumai peN oru kanavu kaNdaaL – adhai
uLLaththil vaiththE vaaduginRaaL

maanida jadhiyil piRanthu vittaaL avaL
maanida dharmaththil kalanthu vittaaL…kalanthu vittaaL
maanida jadhiyil piRanthu vittaaL avaL
maanida dharmaththil kalanthu vittaaL
maNNil vaazhavum mudiyavillai antha
vaanaththil paRakkavum siRagillai
uumai peN oru kanavu kaNdaaL – adhai
uLLaththil vaiththE vaaduginRaaL
veLiyE sollavum mozhiyillai
vEdhanai thiiravum vazhiyillai

**************************************************

ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

பறவைகள் நினைப்பதை யாரறிவார் அந்த
பரம்பொருள் இதயத்தை யாரறிவார்
குழந்தைகள் எண்ணத்தை யாரறிவார் அந்த
குலமகள் ஆசையை யாரறிவார்
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள்
ஒரு நாளாவது மகிழ்ந்திருப்பாள்
உலகம் காற்றாய்ப் பிறந்திருந்தாலும்
ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள்
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்

மானிட ஜதியில் பிறந்து விட்டாள் அவள்
மானிட தர்மத்தில் கலந்து விட்டாள்…கலந்து விட்டாள்
மானிட ஜதியில் பிறந்து விட்டாள் அவள்
மானிட தர்மத்தில் கலந்து விட்டாள்
மண்ணில் வாழவும் முடியவில்லை அந்த
வானத்தில் பறக்கவும் சிறகில்லை
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை
_________________

தூக்கணாங்குருவி கூடு


MOVIE : VANAMBADI
MUSIC : KVM
SINGER : P SUSHEELA
LYRICS : KANNADASAN

thuukkaNaangguruvi kuudu
thuunggak kaNdaan maraththilE
summaap pOna machchaanukku
enna ninaippO manasilE

paakkiRaan puumugaththaip
paiya paiya kaNNilE
parisam pOtta machchaanukku
enna ninaippO theriyala
thuukkaNaangguruvi kuudu
thuunggak kaNdaan maraththilE
summaap pOna machchaanukku
enna ninaippO manasilE

ammaan viittu peNNaanaalum
summaa summaa kidaikkumaa
arisi paruppu siiru senaththi
aLLi kodukka vENdaamaa….
ammaan viittu peNNaanaalum
summaa summaa kidaikkumaa
arisi paruppu siiru senaththi
aLLi kodukka vENdaamaa
kammaan kayil ponnai vaanggik
kattik koLLa vENdaamaa
kattilum meththaiyum vaanggippOttu
kaaththukkidakka vENdaamaa
thuukkaNaangguruvi kuudu
thuunggak kaNdaan maraththilE
summaap pOna machchaanukku
enna ninaippO manasilE

kuuraik kudisai naduvilE
anthap padukkaiyaip pOttu
oru kuththu viLakkai Eththi vachchi
kOlaththaippOttu
aaRa amara machchaanOdu padikkaNum paattu
aanaappatta raajaa kuuda mayanggaNum kEttu…
adha vittu…
thuukkaNaangguruvi kuudu
thuunggak kaNdaan maraththilE
summaap pOna machchaanukku
enna ninaippO manasilE

****************************************************

தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே

பாக்கிறான் பூமுகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்போ தெரியல
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே

அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா….
அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா
கம்மான் கயில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே

கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப்போட்டு
ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு
ஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு…
அத விட்டு…
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்போ மனசிலே
_________________

ஏட்டில் எழுதி வைத்தேன்


MOVIE : VANAMBADI
MUSIC : KVM
SINGERS : TMS & LR ESWARI
LYRICS : KANNADASAN

Ettil ezhuthi vaiththEn
ezhuthiyathai solli vaiththEn
kEttavaLai kaaNOmadaa iRaivaa
kuuttichchenRa idamEdhadaa
O..O…
Ettil ezhuthi vaiththEn
ezhuthiyathai solli vaiththEn
kEttavaLai kaaNOmadaa iRaivaa
kuuttichchenRa idamEdhadaa
aa..aa..-ha -ha -ha -haa..aa..

thirumbi varum nEraththilE arumbi niRpaaL kanniyenRu..
thirumbi varum nEraththilE arumbi niRpaaL kanniyenRu
virumbi naanum vanthEnadaa… iRaivaa
viNveLiyil maRaiththaayadaa
kaadu vetti thOttamittEn kaNNiiraal kodi vaLarththEn
thOttaththai azhiththaayadaa.. iRaivaa
aattaththai mudiththaayadaa
Ettil ezhuthi vaiththEn
ezhuthiyathai solli vaiththEn
kEttavaLai kaaNOmadaa iRaivaa
kuuttichchenRa idamEdhadaa

paruvaththai koduththuvittu uruvaththai eduththukkoNdaay..
paruvaththai koduththuvittu uruvaththai eduththukkoNdaay
dharmaththin thalaivanallavaa iRaivaa
saagasa kalainjanallavaa
Ettil ezhuthi vaiththEn
ezhuthiyathai solli vaiththEn
kEttavaLai kaaNOmadaa iRaivaa
kuuttichchenRa idamEdhadaa
***********************************************************

ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஓ..ஓ…
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஆ..ஆ..ஹ ஹ ஹ ஹா..ஆ..

திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று..
திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று
விரும்பி நானும் வந்தேனடா… இறைவா
விண்வெளியில் மறைத்தாயடா
காடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன்
தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா
ஆட்டத்தை முடித்தாயடா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா

பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்..
பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்
தர்மத்தின் தலைவனல்லவா இறைவா
சாகச கலைஞனல்லவா
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
_________________