நிலவென்னும் ஆடை கொண்டாளோ


MOVIE : PARAKKUM PAAVAI
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGERS : TMS & P SUSHEELA

-nilavennum aadai koNdaaLO avaL than nizhaludan ninRaaLO
kuLirennum aadai koNdaaLO avaL than kuunthalil maRainthaaLO
iravilE thannaiththaanE kaaNa ninaiththaaLO
iLamaiyai nEril kaNdu Engga ninaiththaaLO
peNNE peNNOdu pEsuvOm sugam ennenRu kuuRuvOm
en munnE varaamal thiirumO
idhazh muththanggaL sinthumO

-nizhalennum mEdai kaNdaanO avan en nizhalukku ninRaanO
malarennum aadai koNdaanO avan peN mayakkam koNdaanO
paruvaththai nEril kaNdu aaLa ninaiththaanO
paadinaal kuudum enRu paadi mudiththaanO
paavam ennenna vEgamO nizhal paaththaalum pOdhumO
ivaL paadham kaNdaalum pOdhumO avan eNNanggaL thiirumO
-nizhalennum mEdai kaNdaanO avan en nizhalukku ninRaanO
malarennum aadai koNdaanO avan peN mayakkam koNdaanO

aaNmaiyin kaiyil thaanE peNmai varavENdum
vanthapin peNmai thaanE inbam tharavENdum
mannavan kObam koNdaal kaNNiir vidavENdum
vanjchiyar vanjcham vaiththaal paadham thoda vENdum
onRil onRaaga pEsalaam adhil yaarenRu paarkkalaam
inggu vanthaal nanRaaga pEsalaam
?…..

-nizhalennum mEdai kaNdaanO avan en nizhalukku ninRaanO
malarennum aadai koNdaanO avan peN mayakkam koNdaanO

நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
இரவிலே தன்னைத்தானே காண நினைத்தாளோ
இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
பெண்ணே பெண்ணோடு பேசுவோம் சுகம் என்னென்று கூறுவோம்
என் முன்னே வராமல் தீருமோ
இதழ் முத்தங்கள் சிந்துமோ

நிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ
பருவத்தை நேரில் கண்டு ஆள நினைத்தானோ
பாடினால் கூடும் என்று பாடி முடித்தானோ
பாவம் என்னென்ன வேகமோ நிழல் பாத்தாலும் போதுமோ
இவள் பாதம் கண்டாலும் போதுமோ அவன் எண்ணங்கள் தீருமோ
நிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ

ஆண்மையின் கையில் தானே பெண்மை வரவேண்டும்
வந்தபின் பெண்மை தானே இன்பம் தரவேண்டும்
மன்னவன் கோபம் கொண்டால் கண்ணீர் விடவேண்டும்
வஞ்சியர் வஞ்சம் வைத்தால் பாதம் தொட வேண்டும்
ஒன்றில் ஒன்றாக பேசலாம் அதில் யாரென்று பார்க்கலாம்
இங்கு வந்தால் நன்றாக பேசலாம்
?…..

நிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ