தொட்டுக்கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா

MOVIE : MAATTUKKAARA VELAN
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA
.

thottukkoLLavaa nenjchil thoduththukkoLLavaa
pattukkoLLavaa mella pazhagikkoLLavaa
kattikkoLLavaa unnai kalanthu koLLavaa
kattikkoLLa vaa vaa vaa mella thazhuvi koLLa vaa
thottukkoLLavaa nenjchil thoduththukkoLLavaa
pattukkoLLavaa vaa mella pazhagikkoLLavaa

manthiraththai solli solli kEtkavaa
un maunaththukku Osai nayam sErkkavaa
antharaththil panthal onRu pOdavaa
-naan panthalukkuL panthu viLaiyaadavaa
aadumbOdhu sinthu kavi paadavaa
-naan ammammaa enRu kaNNai muudavaa

thottukkoLLavaa nenjchil thoduththukkoLLavaa
pattukkoLLavaa mella pazhagikkoLLavaa

thanggaththinaal kalasam vaiththa kOburam
-nadai thavaLum bOdhu kulunggum isai aayiram
kaadhalennum thEn irukkum paaththiram
adhu kaalanththOrum naan kudikka maaththiram
iruvarukkum inbamennum saaththiram
kaalam innum uNdu athaRkuL enna aaththiram

thottukkoLLavaa nenjchil thoduththukkoLLavaa
pattukkoLLavaa mella pazhagikkoLLavaa
kattikkoLLavaa unnai kalanthu koLLavaa
kattikkoLLa vaa vaa vaa mella thazhuvi koLLa vaa
*****************************************************

தொட்டுக்கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா
பட்டுக்கொள்ளவா மெல்ல பழகிக்கொள்ளவா
கட்டிக்கொள்ளவா உன்னை கலந்து கொள்ளவா
கட்டிக்கொள்ள வா வா வா மெல்ல தழுவி கொள்ள வா
தொட்டுக்கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா
பட்டுக்கொள்ளவா வா மெல்ல பழகிக்கொள்ளவா

மந்திரத்தை சொல்லி சொல்லி கேட்கவா
உன் மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா
நான் பந்தலுக்குள் பந்து விளையாடவா
ஆடும்போது சிந்து கவி பாடவா
நான் அம்மம்மா என்று கண்ணை மூடவா

தொட்டுக்கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா
பட்டுக்கொள்ளவா மெல்ல பழகிக்கொள்ளவா

தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவளும் போது குலுங்கும் இசை ஆயிரம்
காதலென்னும் தேன் இருக்கும் பாத்திரம்
அது காலந்தோரும் நான் குடிக்க மாத்திரம்
இருவருக்கும் இன்பமென்னும் சாத்திரம்
காலம் இன்னும் உண்டு அதற்குள் என்ன ஆத்திரம்

தொட்டுக்கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா
பட்டுக்கொள்ளவா மெல்ல பழகிக்கொள்ளவா
கட்டிக்கொள்ளவா உன்னை கலந்து கொள்ளவா
கட்டிக்கொள்ள வா வா வா மெல்ல தழுவி கொள்ள வா