நீ தான் ஒருவனே


MOVIE ; AMARAN
MUSIC : AADITHYAN
SINGER : KARTHIK RAJA

mu-sthaffaa ….. mu-sthaffaa
mu-sthaffaa mu-sthaffaa mu-sthaffaa mu-sthaffaa
-nii thaan oruvanE nii thaan thalaivanE
iravu nEram ..-hA…. nilavu niiyE… -haa
vidiyumbOthu kathirum niiyE
uurE unththan kaiyil
vaanam unththan paiyil
mu-sthaffaa mu-shthaffaa mu-sthaffaa mu-sthaffaa

kOdi iravu kOdi nilavu vanththu pOgum inggE
kELvi kEtka yaarum illai kiithai EthinggE
kOthai rathiyum kOppai mathuvum bOthai ERRum inggE
enththa vithiyum enththa muRaiyum thiiNdidaathinggE
vEtkkai ithu suthanthira vEtkai
kOttai ithu oruvanin kOttai
aaNOdu peNNukkum peNNOdu aaNukkum vEttai
mu-sthaffaa mu-sthaffaa mu-sthaffaa mu-sthaffaa

paathi udaiyil jOdi malargaL
uuril ulavum enggum
-nuuRu malargaL Odi vanththu
maarbil puuppaRikkum
? niinggaL nanainththaal kOdi ruubaay kottum
kOdi varavu kOdi selavu unggaLin thittam
illai ethirigaL unakkillai
illai thOlvigaL unakkillai
muththanggaL seyginRa saththanggaL eppOthum illai

mu-sthaffaa mu-sthaffaa mu-sthaffaa mu-sthaffaa
-nii thaan oruvanE nii thaan thalaivanE
iravu nEram ..-hA…. nilavu niiyE… -haa
vidiyumbOthu kathirum niiyE
uurE unththan kaiyil
vaanam unththan paiyil

Tell-a-Friend

முஸ்தபா….. முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா
நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே
இரவு நேரம் ..ஹா…. நிலவு நீயே… ஹா
விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்
முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா

கோடி இரவு கோடி நிலவு வந்து போகும் இங்கே
கேள்வி கேட்க யாரும் இல்லை கீதை ஏதிங்கே
கோதை ரதியும் கோப்பை மதுவும் போதை ஏற்றும் இங்கே
எந்த விதியும் எந்த முறையும் தீண்டிடாதிங்கே
வேட்க்கை இது சுதந்திர வேட்கை
கோட்டை இது ஒருவனின் கோட்டை
ஆணோடு பெண்ணுக்கும் பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை
முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா

பாதி உடையில் ஜோடி மலர்கள்
ஊரில் உலவும் எங்கும்
நூறு மலர்கள் ஓடி வந்து
மார்பில் பூப்பறிக்கும்
? நீங்கள் நனைந்தால் கோடி ரூபாய் கொட்டும்
கோடி வரவு கோடி செலவு உங்களின் திட்டம்
இல்லை எதிரிகள் உனக்கில்லை
இல்லை தோல்விகள் உனக்கில்லை
முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள் எப்போதும் இல்லை

முஸ்தபா முஸ்தபா முஸ்தபா முஸ்தபா
நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே
இரவு நேரம் ..ஹா…. நிலவு நீயே… ஹா
விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்

நாளை இந்த காலம் இது


MOVIE : NAALAI
MUSIC : KARTHIK RAJA
SINGERS : KARTHIK & TIPPU

naaLai intha kaalam idhu
ini nammai enggu koNdu sellum
kaalam aadum kaNNaammuuchchi
iru kaNNai katti kaattil thaLLum
kaattil midhakkum sarugukku
pOgum paadhai puriyavillai
kaattinuLLE pOgaiyilE
iruLum oLiyum vERu illai..
OO…OO…OO….
naaLai intha kaalam idhu
ini nammai enggu koNdu sellum
kaalam aadum kaNNaammuuchchi
iru kaNNai katti kaattil thaLLum

anRu thodanggi inRu varaiyil
eththanai thudippu idhayaththilE
thudikkum idhayam thuunggivittaal
manidha uyirgaL bommaigaLE
vaanam mElE buumi kiizhE
vaazhnthu paarpOm nashtamillai
vaasal thORum vEdhanai irukkum
veRRi namakku dhuuramillai
-naaLai enna nadanthidumO
vidintha pin thaan viLanggidumO
thEdum vaazhkkai kidaiththidumO
vidai yaar thaan solvaarO..

naaLai intha kaalam idhu
ini nammai enggu koNdu sellum
kaalam aadum kaNNaammuuchchi
iru kaNNai katti kaattil thaLLum

ENi mattum enggum irunthaal
paramapadhaththil arththamillai
paambu kuuda paadam nadaththum
kaRRukkoLvOm kuuchchamillai
-naNban pagaivan pOtti enRu
-nadakkum naadagam edhirinilE
thunbam inbam thanimai enRu
thodarum vaazhkkai pudhirinilE
-naaLai enna nadanthidumO
vidintha pin thaan viLanggidumO
thEdum vaazhkkai kidaiththidumO
vidai yaar thaan solvaarO..

naaLai intha kaalam idhu
ini nammai enggu koNdu sellum
kaalam aadum kaNNaammuuchchi
iru kaNNai katti kaattil thaLLum
kaattil midhakkum sarugukku
pOgum paadhai puriyavillai
kaattinuLLE pOgaiyilE
iruLum oLiyum vERu illai..
OO…OO…OO….


****************************************************

நாளை இந்த காலம் இது
இனி நம்மை எங்கு கொண்டு செல்லும்
காலம் ஆடும் கண்ணாம்மூச்சி
இரு கண்ணை கட்டி காட்டில் தள்ளும்
காட்டில் மிதக்கும் சருகுக்கு
போகும் பாதை புரியவில்லை
காட்டினுள்ளே போகையிலே
இருளும் ஒளியும் வேறு இல்லை..
ஓஓ…ஓஓ…ஓஓ….
நாளை இந்த காலம் இது
இனி நம்மை எங்கு கொண்டு செல்லும்
காலம் ஆடும் கண்ணாம்மூச்சி
இரு கண்ணை கட்டி காட்டில் தள்ளும்

அன்று தொடங்கி இன்று வரையில்
எத்தனை துடிப்பு இதயத்திலே
துடிக்கும் இதயம் தூங்கிவிட்டால்
மனித உயிர்கள் பொம்மைகளே
வானம் மேலே பூமி கீழே
வாழ்ந்து பார்போம் நஷ்டமில்லை
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வெற்றி நமக்கு தூரமில்லை
நாளை என்ன நடந்திடுமோ
விடிந்த பின் தான் விளங்கிடுமோ
தேடும் வாழ்க்கை கிடைத்திடுமோ
விடை யார் தான் சொல்வாரோ..

நாளை இந்த காலம் இது
இனி நம்மை எங்கு கொண்டு செல்லும்
காலம் ஆடும் கண்ணாம்மூச்சி
இரு கண்ணை கட்டி காட்டில் தள்ளும்

ஏணி மட்டும் எங்கும் இருந்தால்
பரமபதத்தில் அர்த்தமில்லை
பாம்பு கூட பாடம் நடத்தும்
கற்றுக்கொள்வோம் கூச்சமில்லை
நண்பன் பகைவன் போட்டி என்று
நடக்கும் நாடகம் எதிரினிலே
துன்பம் இன்பம் தனிமை என்று
தொடரும் வாழ்க்கை புதிரினிலே
நாளை என்ன நடந்திடுமோ
விடிந்த பின் தான் விளங்கிடுமோ
தேடும் வாழ்க்கை கிடைத்திடுமோ
விடை யார் தான் சொல்வாரோ..

நாளை இந்த காலம் இது
இனி நம்மை எங்கு கொண்டு செல்லும்
காலம் ஆடும் கண்ணாம்மூச்சி
இரு கண்ணை கட்டி காட்டில் தள்ளும்
காட்டில் மிதக்கும் சருகுக்கு
போகும் பாதை புரியவில்லை
காட்டினுள்ளே போகையிலே
இருளும் ஒளியும் வேறு இல்லை..
ஓஓ…ஓஓ…ஓஓ….
_________________

ஒரு மாற்றம் ஒரு மாற்றம்


MOVIE : NAALAI
MUSIC : KARTHIK RAJA
SINGER : KARTHIK

oru maaRRam oru maaRRam
idhu idhayaththil irukkiRa thadumaaRRam
-nadai maaRRam udai maaRRam
intha neruppukkuL eppadi niirOttam
-nadanthu pOgum paadhaiyil
iraNdu pakkam puumaram

mazhaiyum veyilum kalantha pin vaanavillaay maaRidum
ulagamE pudhidhaay thOnRum oru maaRRam oru maaRRam
idhu idhayaththil irukkiRa thadumaaRRam
-nadai maaRRam udai maaRRam

-nERRu varai … nERRu varai vaanaththai nii
-nimirnthu paarkka nEramillai
kaNgaL muudi paarththaalum kanavugaL kaNdathillai
muRRuppuLLi pakkaththilE mugavari onRu varugiRadhE
muuchchu kaaRRu moththaththilE
arththam inggu purigiRadhE.. purigiRadhE
OO..OO..OO…
oru maaRRam oru maaRRam
idhu idhayaththil irukkiRa thadumaaRRam

buumiyilE .. buumiyilE yaarumE
thaniyaaga piRappadhillai
vazhiththuNaiyum varugaiyilE
payaNanggaL maRappadhillai
kattaantharaiyil ninRavoru
kaaladai suvadu therigiRadhE
vetta veLiyil thirintha pinnE
viittin arumai purigiRadhE… purigiRadhE
OO..OO..OO…
oru maaRRam oru maaRRam
idhu idhayaththil irukkiRa thadumaaRRam
-nadai maaRRam udai maaRRam
intha neruppukkuL eppadi niirOttam

***************************************************

ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்
நடை மாற்றம் உடை மாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
நடந்து போகும் பாதையில்
இரண்டு பக்கம் பூமரம்

மழையும் வெயிலும் கலந்த பின் வானவில்லாய் மாறிடும்
உலகமே புதிதாய் தோன்றும் ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்
நடை மாற்றம் உடை மாற்றம்

நேற்று வரை … நேற்று வரை வானத்தை நீ
நிமிர்ந்து பார்க்க நேரமில்லை
கண்கள் மூடி பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை
முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே
மூச்சு காற்று மொத்தத்திலே
அர்த்தம் இங்கு புரிகிறதே.. புரிகிறதே
ஓஓ..ஓஓ..ஓஓ…
ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்

பூமியிலே .. பூமியிலே யாருமே
தனியாக பிறப்பதில்லை
வழித்துணையும் வருகையிலே
பயணங்கள் மறப்பதில்லை
கட்டாந்தரையில் நின்றவொரு
காலடை சுவடு தெரிகிறதே
வெட்ட வெளியில் திரிந்த பின்னே
வீட்டின் அருமை புரிகிறதே… புரிகிறதே
ஓஓ..ஓஓ..ஓஓ…
ஒரு மாற்றம் ஒரு மாற்றம்
இது இதயத்தில் இருக்கிற தடுமாற்றம்
நடை மாற்றம் உடை மாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
********************************************

Hey Unnidam Unmaiyai Sollave


MOVIE : CHAKRA VIYUGAM
MUSIC : KARTHIK RAJA
SINGERS : KARTHIK RAJA & SAINDAVI

-hey unnidam uNmaiyai sollavE
thudikkiREn…thavikkiREn…malargiREn virigiREn Enadaa..
-nii ennadi solgiRaay seygiRaay
adadadaa rasikkiREn rusikkiREn karaigiREn Enadii….
enakkuLLE vetkam puuththam irudhayam etti paaththathu..
-nizhalilum ninRu vErththathu.. nijamenRu kiLLi paarththathu..
thirudaa idhu uNmai illai ….. siRu poyyum illai…
un maaRRam kaNdavudan kaaRRil mella ERi naan paRakkiREn…
-hey unnidam uNmaiyai sollavE
thudikkiREn…thavikkiREn…malargiREn virigiREn Enadaa..
-nii ennadi solgiRaay seygiRaay
adadadaa rasikkiREn rusikkiREn karaigiREn Enadii….

-naan peNNenbadhai nii paaradaa kaNgaLaal sirikkiREn
kavidhaiyaay midhakkiREn..
-naan yaarenbadhai nii kuuRadii…
anbinaal nerungginEn aasaiyaal vilaginEn arugil vaa……….
-haa…..-haa…. naan vaanaththai thaaNdiyE kudhikkiREn…
-naan maRumuRai buumiyil piRakkiREn
yaar yaarenbadhai yaar solvadhO
kaadhal thaan buumiyil saatchiyaay irukkudhE…
-nii thiiyillaiyE naan thiiNdavaa…
aasaiyum piRakkuthE avasthaiyum irukkudhE Enadaa…
-haa….-haa.. un kaalgaLil viizhnthida thONudhE..
-hEy,,,, un thOLgaLil saaynthida thONudhE..

************************************************************

ஹேய் உன்னிடம் உண்மையை சொல்லவே
துடிக்கிறேன்…தவிக்கிறேன்…மலர்கிறேன் விரிகிறேன் ஏனடா..
நீ என்னடி சொல்கிறாய் செய்கிறாய்
அடடடா ரசிக்கிறேன் ருசிக்கிறேன் கரைகிறேன் ஏனடீ….
எனக்குள்ளே வெட்கம் பூத்தம் இருதயம் எட்டி பாத்தது..
நிழலிலும் நின்று வேர்த்தது.. நிஜமென்று கிள்ளி பார்த்தது..
திருடா இது உண்மை இல்லை ….. சிறு பொய்யும் இல்லை…
உன் மாற்றம் கண்டவுடன் காற்றில் மெல்ல ஏறி நான் பறக்கிறேன்…
ஹெய் உன்னிடம் உண்மையை சொல்லவே
துடிக்கிறேன்…தவிக்கிறேன்…மலர்கிறேன் விரிகிறேன் ஏனடா..
நீ என்னடி சொல்கிறாய் செய்கிறாய்
அடடடா ரசிக்கிறேன் ருசிக்கிறேன் கரைகிறேன் ஏனடீ….

நான் பெண்ணென்பதை நீ பாரடா கண்களால் சிரிக்கிறேன்
கவிதையாய் மிதக்கிறேன்..
நான் யாரென்பதை நீ கூறடீ…
அன்பினால் நெருங்கினேன் ஆசையால் விலகினேன் அருகில் வா……….
ஹா…..ஹா…. நான் வானத்தை தாண்டியே குதிக்கிறேன்…
நான் மறுமுறை பூமியில் பிறக்கிறேன்
யார் யாரென்பதை யார் சொல்வதோ
காதல் தான் பூமியில் சாட்சியாய் இருக்குதே…
நீ தீயில்லையே நான் தீண்டவா…
ஆசையும் பிறக்குதே அவச்தையும் இருக்குதே ஏனடா…
ஹா….ஹா.. உன் கால்களில் வீழ்ந்திட தோணுதே..
ஹேய்,,,, உன் தோள்களில் சாய்ந்திட தோணுதே

***********************************************************

En Idhayathai Kaanom


MOVIE : CHAKRA VIYUGAM
MUSIC : KARTHIK RAJA
SINGERS : KARTHIK RAJA & BELA SHINDE

en idhayaththai kaaNOm adhai thEduREn naanum
ippO vanthathu njaanam ada nanaiyudhu vaanam
ada modhamodhalaa unkitta thaan sidhaRudhu vetkam
adhai paarththathumE vaarththaiyellaam thoNdaiyil sikkum
ada uruLudhu manasu ippO puraLudhu vayasu
-nii sirikkiRa kolusu ennai siikkiRam urasu..

enna senjcha enna senjcha ada
-niidhaan ennai enna senjcha..
Ey… niththam senjchEn niththam senjchEn
-naan thaan chella yuththam senjchEn
thuunggumbOdhu kaadhal ennai ezhuppividuthu enna senjcha
kuLikkaiyilum kaadhal enna kodhikka vaikkudhu enna senjcha
sariyaana thavaRu idhu.. adhaiyE
thirumba thirumba seyyaNum pOl thONudhu
azhagaana asinggam idhu adhaiyE
thirumba thirumba seyyaNumpOl thONudhE

Eyy…pachchakkiLiyE vENumaa ambuliyE…
adi annakkiLiyE un kannaththil enna kuzhi…

uchchamthalai uchchiyila nii thaan ippO nikkuRadii..
-nenjchikkuzhi maththiyila thiiyai nii vaikkiRadaa
usura thovaichchi puzhinjchi
-nii udhaRi kaaya pOttupputta
muuchchu kaaRRil nuzhainjchu
ennai thikka thiNaRa vachchipputta
enakkuLLE nii vanthu vanmuRaiyai
thuuNdivittu vEdikkai thaan paakkuRa..
kanavukkuL nii vanthu..
thinamum vaadikkaiyaa mOdi viththai kaattuRa..

Eyy…pachchakkiLiyE vENumaa ambuliyE…
adi annakkiLiyE un kannaththil enna kuzhi…

en idhayaththai kaaNOm adhai thEduREn naanum
ippO vanthathu njaanam ada nanaiyudhu vaanam
ada modhamodhalaa unkitta thaan sidhaRudhu vetkam
adhai paarththathumE vaarththaiyellaam thoNdaiyil sikkum
ada uruLudhu manasu ippO puraLudhu vayasu
-nii sirikkiRa kolusu ennai siikkiRam urasu..

Eyy…pachchakkiLiyE vENumaa ambuliyE…

**********************************************************

என் இதயத்தை காணோம் அதை தேடுறேன் நானும்
இப்போ வந்தது ஞானம் அட நனையுது வானம்
அட மொதமொதலா உன்கிட்ட தான் சிதறுது வெட்கம்
அதை பார்த்ததுமே வார்த்தையெல்லாம் தொண்டையில் சிக்கும்
அட உருளுது மனசு இப்போ புரளுது வயசு
நீ சிரிக்கிற கொலுசு என்னை சீக்கிறம் உரசு..

என்ன செஞ்ச என்ன செஞ்ச அட
நீதான் என்னை என்ன செஞ்ச..
ஏய்… நித்தம் செஞ்சேன் நித்தம் செஞ்சேன்
நான் தான் செல்ல யுத்தம் செஞ்சேன்
தூங்கும்போது காதல் என்னை எழுப்பிவிடுது என்ன செஞ்ச
குளிக்கையிலும் காதல் என்ன கொதிக்க வைக்குது என்ன செஞ்ச
சரியான தவறு இது.. அதையே
திரும்ப திரும்ப செய்யணும் போல் தோணுது
அழகான அசிங்கம் இது அதையே
திரும்ப திரும்ப செய்யணும்போல் தோணுதே

ஏய்ய்…பச்சக்கிளியே வேணுமா அம்புலியே…
அடி அன்னக்கிளியே உன் கன்னத்தில் என்ன குழி…

உச்சம்தலை உச்சியில நீ தான் இப்போ நிக்குறடீ..
நெஞ்சிக்குழி மத்தியில தீயை நீ வைக்கிறடா
உசுர தொவைச்சி புழிஞ்சி
நீ உதறி காய போட்டுப்புட்ட
மூச்சு காற்றில் நுழைஞ்சு
என்னை திக்க திணற வச்சிப்புட்ட
எனக்குள்ளே நீ வந்து வன்முறையை
தூண்டிவிட்டு வேடிக்கை தான் பாக்குற..
கனவுக்குள் நீ வந்து..
தினமும் வாடிக்கையா மோடி வித்தை காட்டுற..

ஏய்ய்…பச்சக்கிளியே வேணுமா அம்புலியே…
அடி அன்னக்கிளியே உன் கன்னத்தில் என்ன குழி…

என் இதயத்தை காணோம் அதை தேடுறேன் நானும்
இப்போ வந்தது ஞானம் அட நனையுது வானம்
அட மொதமொதலா உன்கிட்ட தான் சிதறுது வெட்கம்
அதை பார்த்ததுமே வார்த்தையெல்லாம் தொண்டையில் சிக்கும்
அட உருளுது மனசு இப்போ புரளுது வயசு
நீ சிரிக்கிற கொலுசு என்னை சீக்கிறம் உரசு..

ஏய்ய்…பச்சக்கிளியே வேணுமா அம்புலியே…

************************************************************