புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே


MOVIE : PAANAI PIDITHTHAVAL BAAKYASAALI
MUSIC : VISWANATHAN -RAMAMURTHY
SINGER : TRICHY LOGANATHAN.

purusan viittil vaazhappOgum peNNE thanggachchi kaNNE
sila puththimadhigaL solluREn kELu munnE
thanggachchi kaNNE.. sila puththimadhigaL solluREn kELu munnE

arasan viittu poNNaaga irunthaalum ..ammaa
aganthai koLLa kuudaathu ennaaLum
purusan viittil vaazhappOgum peNNE thanggachchi kaNNE
sila puththimadhigaL solluREn kELu munnE

maamanaarai maamiyaarai madhikkaNum.. unnai
maalaiyitta kaNavanaiyE thuthikkaNum
saamakkOzhi kuuvaiyilE muzhikkaNum
kuLichchi saaNam theLiththu kOlam pOttu
samaiyal vElai thuvakkaNum.
purusan viittil vaazhappOgum poNNE thanggachchi kaNNE
sila puththimadhigaL solluREn kELu munnE

kaNNaal pEsum payaga munnE nillaathE
-nii kaaNaathathai kaNdEn enRu sollaathE
intha aNNE sollum amudha vaarththai thaLLaathE
-namma appEn paattan pEraik keduththuk koLLaathE
purusan viittil vaazhappOgum poNNEthanggachchi kaNNE
sila puththimadhigaL solluREn kELu munnE

purusan uyirai miittu thanthava poNNuthaan
Odum pozhuthai anggE nillunnu sonnava poNNu thaan
arasan nadungga niidhi sonnava poNNuthaan
avangga aa-sthi kaNakku sonnaa kaRpu oNNu thaan
purusan viittil vaazhappOgum poNNEthanggachchi kaNNE
sila puththimadhigaL solluREn kELu munnE

purusan kuuda nii irunthu puuvum maNamum pOl magizhnthu
kuurachchElaiyum thaaliyum manjchaLum kungguma pottum
-nagaiyum nattum kuRainjchidaama niRainjchikittu
aa….aa….aa….
makkaLai peththu manaiya peththu
makkaL vayaththula pEranai peththu
pEran vayaththula puLLaiyai peththu
-nOyillaama nodiyillaama
-nuuRu vayasu vaazha pORa thanggachchi
-namakku saami thuNaiyirukku thanggachchi
-namakku saami thuNaiyirukku … saami thuNaiyirukku thanggachchi….

 

*************************************************************

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும் ..அம்மா
அகந்தை கொள்ள கூடாது என்னாளும்
புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

மாமனாரை மாமியாரை மதிக்கணும்.. உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்.
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வார்த்தை தள்ளாதே
நம்ம அப்பேன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் உயிரை மீட்டு தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணு தான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவங்க ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணு தான்
புருசன் வீட்டில் வாழப்போகும் பொண்ணேதங்கச்சி கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரச்சேலையும் தாலியும் மஞ்சளும் குங்கும பொட்டும்
நகையும் நட்டும் குறைஞ்சிடாம நிறைஞ்சிகிட்டு
ஆ….ஆ….ஆ….
மக்களை பெத்து மனைய பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல புள்ளையை பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு … சாமி துணையிருக்கு தங்கச்சி….
***********************************************************