அவள் செந்தமிழ் தேன் மொழியாள்


MOVIE : MAALAI ITTA MANGAI
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGER : T R MAGALINGAM

sillenRu puuththa siRu nerunjchi kaattinilE
-nillenRu kURi niRuththi vazhi pOnaaLE
-ninRAthu pOl ninRaaL nedunthuuram paRanththaaL
-niRkumO aavi nilaikkumO nenjcham
maNam peRumO vaazhvE….aa…aa..aa..aa..aa..

senththamiz thEn mozhiyaaL
-nilaavena sirikkum malark kodiyaaL (2)
paingkani ithazhil pazarasam tharuvaaL
parukida thalai kunivaaL

kaaRRinil piRanththavaLO puthithaay
kaRpanai vadiththavaLO
sERRinil malarnththa senththaamaraiyO
sevvanththip pUssaramO

avaL senththamiz thEn mozhiyaaL
-nilaavena sirikkum malark kodiyaaL (2)
paingkani ithazhil pazarasam tharuvaaL
parukida thalai kunivaaL

kaNkaLil nIlam viLaiththavaLO
athaik kadalinil koNdu karaiththavaLO
peNNukku peNNE pEraasai koLLum
pErazhakellaam padaiththavaLO…

avaL senththamiz thEn mozhiyaaL
-nilaavena sirikkum malark kodiyaaL (2)
paingkani ithazhil pazarasam tharuvaaL
parukida thalai kunivaaL

Tell-a-Friend

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

ஆடை கட்டி வந்த நிலவோ


MOVIE : AMUDHA VALLI
MUSIC : MSV
SINGERS : TR MAHALINGAM & P SUSHEELA

aadai katti vantha nilavO – kaNNil
mEdai katti aadum ezhilO
ivaL aadai katti vantha nilavO- kaNNil
mEdai katti aadum ezhilO
kuLir Odaiyil midhakkum vaNNa jaadaiyil sirikkum ivaL
kaadu vittu vantha mayilO – nenjchil
kuudu katti vaazhum kuyilO

thuLLi thuLLi aadum inbalOga manggai
sonthamuLLa raaNi ivaL naagamanggai
thuLLi thuLLi aadum inbalOga manggai
sonthamuLLa raaNi ivaL naagamanggai
ellaiyaRRa aasaiyil Odi vanthaaL
thaLLi vittu pOna pinbu thEdi vanthaaL
ellaiyaRRa aasaiyil Odi vanthaaL
thaLLi vittu pOna pinbu thEdi vanthaaL
ilaithaanirunthu kaniyE sumanthu
thaniyE kidantha kodi thaanE
kaNNaaLanudan kalanthaaruyir peRa
kaambinil paadum kiLi thaanE
thuLLi thuLLi aadum inbalOga manggai
sonthamuLLa raaNi ivaL naagamanggai

aa…aa…aa…
anjchugaiyil peRRa magaLO
kulunggum alli malar inaththavaLO
anjchugaiyil peRRa magaLO
kulunggum alli malar inaththavaLO
kunRil unththi vizhum niiralaiyil
Odi viLaiyaadi manam sinthi varum thenRal thaanO
inbam thanthu magizhginRa maanO

kaNdu manam kuuduvathil thunbamillai
anjchi anjchi Oduvathil inbamillai
viiNai mattum irunthaal naadhamillai
miittum viral pirinthaal gaanamillai
idhayam kaninthu ethaiyum maRanthu
iruvar magizhnthu uRavaada
-nan nEramidhE.. manam miiRiduthE
-nan nEramidhE manam miiRiduthE
vana maaLigaiyOram aadiduvOm
aa…aa….aa…aa….

aadai katti vantha nilavO – kaNNil
mEdai katti aadum ezhilO
ivaL aadai katti vantha nilavO- kaNNil
mEdai katti aadum ezhilO
kuLir Odaiyil midhakkum vaNNa jaadaiyil sirikkum ivaL
kaadu vittu vantha mayilO – nenjchil
kuudu katti vaazhum kuyilO – mugil
aadai katti vantha nilavO -kaNNil
mEdai katti aadum ezhilO…

ஆடை கட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ- கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் வண்ண ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ – நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ

துள்ளி துள்ளி ஆடும் இன்பலோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாகமங்கை
துள்ளி துள்ளி ஆடும் இன்பலோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாகமங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின்பு தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின்பு தேடி வந்தாள்
இலைதானிருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தாருயிர் பெற
காம்பினில் பாடும் கிளி தானே
துள்ளி துள்ளி ஆடும் இன்பலோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாகமங்கை

ஆ…ஆ…ஆ…
அஞ்சுகையில் பெற்ற மகளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
அஞ்சுகையில் பெற்ற மகளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
குன்றில் உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மனம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்து மகிழ்கின்ற மானோ

கண்டு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே.. மனம் மீறிடுதே
நன் நேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகையோரம் ஆடிடுவோம்
ஆ…ஆ….ஆ…ஆ….

ஆடை கட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ- கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் வண்ண ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ – நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ – முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ -கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ…