மெல்லப்போ மெல்லப்போ


MOVIE : KAAVALKKAARAN
MUSIC : MSV
SINGERS : TMS & P SUSHEELA
.

mellappO mellappO mellidaiyaaLE mellappO
sollippO sollippO solvathai kaNNaal sollippO malligaiyE
mellappO mellappO mellidaiyaaLE mellappO

Odaiyil niiralai mEdaiyil thenRalin naadagam eththanai aayiram (2)
thottil kattip pOdum puunggodi
paLLi koLLa paarkkum painggiLi
anthi maalaiyil inba sOlaiyil sorkamaagumO
mellaththaan mellaththaan mayanggi nadanthaaL maadhu
sollaththaan sollaththaan thayanggi varainthaaL thuudhu ippozhuthE
mellappO ….. mellaththaan
m-hum sollippO …. aa-haa solliththaan.

semmaanggani punnagai nallOviyam
sevvidhal thEnmaadhuLai ponmozhi sollOviyam (2)
sinthu nadai pOdum paaRkudam
sinna vizhi paarvai puuchcharam
enna mEniyO innum paadavO kani thEdavO
mellappO ….. mellaththaan

ponnezhil thaamarai puuvinaal
mannavan kaNvizhi poygaiyil mEvinaan
muththuththamizh paadum puungguyil
muththam onRu vENdum aaNkuyil
anthappaadalil anbu uudalil manggai naaNinaaL

mellappO mellappO mellidaiyaaLE mellappO
sollippO sollippO solvathai kaNNaal sollippO malligaiyE
mellappO ….. mellaththaan
m-hum sollippO …. aa-haa solliththaan.

*******************************************************************************

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ

ஓடையில் நீரலை மேடையில் தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம் (2)
தொட்டில் கட்டிப் போடும் பூங்கொடி
பள்ளி கொள்ள பார்க்கும் பைங்கிளி
அந்தி மாலையில் இன்ப சோலையில் சொர்கமாகுமோ
மெல்லத்தான் மெல்லத்தான் மயங்கி நடந்தாள் மாது
சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள் தூது இப்பொழுதே
மெல்லப்போ ….. மெல்லத்தான்
ம்ஹும் சொல்லிப்போ …. ஆஹா சொல்லித்தான்.

செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
செவ்விதல் தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம் (2)
சிந்து நடை போடும் பாற்குடம்
சின்ன விழி பார்வை பூச்சரம்
என்ன மேனியோ இன்னும் பாடவோ கனி தேடவோ
மெல்லப்போ ….. மெல்லத்தான்

பொன்னெழில் தாமரை பூவினால்
மன்னவன் கண்விழி பொய்கையில் மேவினான்
முத்துத்தமிழ் பாடும் பூங்குயில்
முத்தம் ஒன்று வேண்டும் ஆண்குயில்
அந்தப்பாடலில் அன்பு ஊடலில் மங்கை நாணினாள்

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே
மெல்லப்போ ….. மெல்லத்தான்
ம்ஹும் சொல்லிப்போ …. ஆஹா சொல்லித்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: