பூமுடிப்பாள் இந்த பூங்குழலி


MOVIE : NENJIRUKKUM VARAI
MUSIC : VISWANATHAN MS
SINGER : TMS.

puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi
puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi
paarvaiyilE mannam pErezhuthi
paarvaiyilE mannam pErezhuthi
adhai paarththirukkum kaNNil niirezhuthi
adhai paarththirukkum kaNNil niirezhuthi
puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi

ponmaNikkaNgaLil anjchanam thiitti
puuvaiyin aNNan kaivaLai puutti
ponmaNikkaNgaLil anjchanam thiitti
puuvaiyin aNNan kaivaLai puutti
thaayvazhiyE vantha naaNaththai kaatti
thaayvazhiyE vantha naaNaththai kaatti
thaan varuvaaL manggai manggaLam suutti
thaan varuvaaL manggai manggaLam suutti
puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi

( nigazhum paarththiba aaNdu aavaNiththinggaL irubathaam naaL… thiruvaLar selvan sivaraamanukkum, thiruvaLar selvi raajEshvarikkum, nadaipeRum thirumaNaththiRku suRRam suuzha vanthirunthu vaazhththiyaruLa vENdugiREn …. thanggaL nalvaravai virumbum raguraaman, raguraaman, raguraa..raa..raa…man.
maadhanaar thanggaL magaLenRu paarththirukka… maappiLLai munvanthu maNavaRaiyil kaaththirukka… kaadhalaaL mella kaal paarththu nadanthu vara…. kanniyavaL kaiyil katti vaiththa maalai thara… kaaLai thirukkaraththil kanagamaNi saram edukka… aanaththam paadu ena aanROr kural piRakka…. kottiyathu mELam………kuvinthathu kOdi malar… kattinaan maanggalyam……. manai vaazhga thuNai vaazhga…… kulam vaazhga………)

kaiththalam thanthEn en kaNmaNi vaazhga
kadamai mudinthathu kalyaaNam aaga
kaiththalam thanthEn en kaNmaNi vaazhga
kadamai mudinthathu kalyaaNam aaga
adaikkalam niiyenRu vanthanaL vaazha
adaikkalam niiyenRu vanthanaL vaazha
aaNdavan pOl unnai kOvil koNdaada

puumudiththaaL intha puungguzhali
pudhu siir adainthaaL vaNNa thEnaruvi
en paarvaiyilE unthan pEr ezhuthi
adhai paarththiruppEn kaNNil niirezhuthi
kaNNil niirezhuthi…. kaNNil niirezhuthi…..
*************************************************************

பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னம் பேரெழுதி
பார்வையிலே மன்னம் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

( நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் இருபதாம் நாள்… திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும், நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன் …. தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா…மன்.
மாதனார் தங்கள் மகளென்று பார்த்திருக்க… மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க… காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர…. கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர… காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க… ஆனத்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க…. கொட்டியது மேளம்………குவிந்தது கோடி மலர்… கட்டினான் மாங்கல்யம்……. மனை வாழ்க துணை வாழ்க…… குலம் வாழ்க………)

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூமுடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி…. கண்ணில் நீரெழுதி…..

**********************************************************

One Response to “பூமுடிப்பாள் இந்த பூங்குழலி”


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: